சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை உச் சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதில் தலைமை தேர்தல் அதிகாரி அனில் மசிஹ், அளிக்கப்பட எட்டு வாக்குகளை வேண்டுமென்றே செல்லாததாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிமன்றம் ஆனது அரசியலமைப்பின் 142வது சட்டப் பிரிவின் கீழ், "முழுமையான நீதியை" வழங்குவதற்காகவும் தேர்தல் ஜனநாயகத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதற்காகவும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது.
மாநகராட்சி அமைப்பு ஐந்தாண்டு பதவிக் காலத்தினைக் கொண்டிருந்தாலும், இங்கு மேயர் ஓராண்டிற்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்த மாநகராட்சி அமைப்பின் பதவிக் காலத்தின் முதல் மற்றும் நான்காம் ஆண்டில் ஒரு பெண் வேட்பாளருக்காக அந்த இடம் ஒதுக்கப்படுகிறது.
இந்த மாநகராட்சிக்கான தேர்தல் ஆனது கடைசியாக 2021 ஆம் ஆண்டில் நடைபெற்றது.