புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளரான டாக்டர் சதீஷ் ரெட்டி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO-Defence Research and Development Organisation) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார்.
DRDO-ன் தலைவராக பதவி வகிக்கும் இவர் அதே நேரத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் (DDR&D - Department of Defence Research and Development) செயலாளராகவும் செயல்படுவார்.
இப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன் இவர் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் ஏவுகணைகள் மற்றும் போர்த்திறன் சார்ந்த அமைப்புகளின் (DGMSS - Director General, Missiles Strategic System) பொது இயக்குநராகவும் பணியாற்றினார்.
2018ஆம் ஆண்டு மே மாதத்தில் DRDO-ன் தலைவர் டாக்டர்கிறிஸ்டோபர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு DRDO-ன் தலைவர் பதவி காலியாக உள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் ராயல் ஏரோநாட்டிக்கல் சொசைட்டியின் வெள்ளிப் பதக்கம் பெற்ற இந்தியாவில் பணியாற்றும் முதலாவது பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் டாக்டர்.சதீஷ் ரெட்டி ஆவார்.
சிறந்த பொறியாளருக்கான முதலாவது IEI (Institution of Engineers India) மற்றும் IEEE (Institute of Electrical and Electronics Engineers - America) உடன் இணைந்து வழங்கும் விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.