TNPSC Thervupettagam

சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளங்காப்பிற்கான சர்வதேச தினம் - ஜூலை 26

July 29 , 2024 118 days 172 0
  • இது ஒரு தனித்துவமான, சிறப்பு மற்றும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பாக நிலவும் சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சதுப்புநிலத்தின் மீதான நிலையான மேலாண்மை, வளங்காப்பு மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கான தீர்வுகளையும் ஊக்குவிக்கிறது.
  • இது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) 2015 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • இந்தியாவில் 1987 ஆம் ஆண்டில் 4,046 சதுர கிலோ மீட்டராக இருந்த சதுப்புநிலங்களின் பரவல் ஆனது 2019 ஆம் ஆண்டில் 4,992 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.
  • 2006 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சுமார் 3.69 மில்லியன் ஹெக்டேராக இருந்த இயற்கையான கடலோர ஈரநிலங்களின் பரவல் ஆனது சுமார் 3.62 மில்லியன் ஹெக்டேராக குறைந்துள்ளது.
  • ஓதங்களுக்கு இடைப்பட்ட சேற்றுப் பரப்பு ஆனது 116,897 ஹெக்டேர் ஆகவும், உவர்நீர் சதுப்பு நிலங்கள் 5,647 ஹெக்டேர் ஆகவும் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்