மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது, கோவாவில் ‘சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல்’ என்ற பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது, சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான "முழுச் சமூகம்" சார்ந்த அணுகுமுறையின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இது சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்காக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்தச் செய்வதோடு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியது.
அடுத்த ஓர் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பிரச்சாரத்தில் சதுப்பு நிலங்கள் குறித்த மதிப்பை மக்களுக்கு உணர்த்துவது, சதுப்புநில நண்பன் திட்டத்தின் பரவலை அதிகரிப்பது மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்காக குடிமக்கள் சார்ந்த ஒரு கூட்டாண்மைகளை உருவாக்குவது ஆகியவை அடங்கும்.