சென்னையில் நடைபெறுகின்ற 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள், அதிக எண்ணிக்கையிலான அணிகள் மற்றும் பெண் சதுரங்க வீராங்கனைகளின் அதிக அளவிலானப் பங்கேற்பு என இது பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
முதலில் இந்த ஒலிம்பியாட் போட்டியானது ரஷ்யாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது.
ஆனால் ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.
இதில் கலந்து கொள்கின்ற 73 இந்தியக் கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த ஒலிம்பியாட்டின் வேஷ்டி அணிந்தச் சின்னமான தம்பி சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.