TNPSC Thervupettagam

சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகம்

January 30 , 2022 905 days 541 0
  • 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள (ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு) புலிகளின் எண்ணிக்கை 80 என்ற ஒரு அளவில் இரட்டிப்படைந்ததையடுத்து அந்தக் காப்பகத்திற்கு மதிப்பு மிக்க TX2 என்ற ஒரு விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • சத்தியமங்கலம் வனவிலங்குச் சரணாலயமானது 2013 ஆம் ஆண்டில் ஒரு புலிகள் வளங்காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
  • இது நீலகிரி மலைப் பகுதிக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் நிலப்பகுதிக்கும் இடையிலான ஒரு முக்கியமான இணைப்புப் பகுதியாகும்.
  • இந்தக் காப்பகத்தின் ஒரு பகுதியாக விளங்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகமானது தற்போது உலகிலேயே அதிக அளவில் புலிகள் வாழும் இடமாக திகழ்கிறது.
  • ஒப்பீட்டளவில் புதிதான இந்தப் புலிகள் காப்பகத்தினை, இந்தியாவிலுள்ள புலிகளின் மூலப்பகுதிகளுள் ஒன்றாக மாற்றுவதற்கு மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு TX2 விருது ஒரு முக்கிய அங்கீகாரத்தை அளிக்கிறது.
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தினைத் தவிர்த்து, நேபாளத்திலுள்ள பார்டியா என்ற தேசியப் பூங்காவிற்கும் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியதற்காக இந்த ஆண்டின் TX2 விருதானது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்