லாவோஸ், மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக, இந்தியா சத்பவ் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இந்த நாடுகள் யாகி புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப் பட்டு உள்ளன.
இந்தியா வியட்நாமுக்கு சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ள நிவாரண உதவியையும், லாவோஸுக்கு சுமார் 1,00,000 டாலர் மதிப்பிலான உதவியையும் வழங்கியுள்ளது.
யாகி புயலானது (ஜப்பானால் பெயரிடப் பட்டது) 2024 ஆம் ஆண்டில் ஆசியாவைத் தாக்கிய அதி வலிமையான வெப்பமண்டலச் சூறாவளி என்று குறிப்பிடப்படுகிறது.