பேராசிரியர் சத்யேந்திர நாத் போஸ் அவர்களின் 125-வது பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் கொல்கத்தாவில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியை அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சத்யேந்திர நாத் போஸ்
உலகப் புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளரான சத்யேந்திரநாத் போஸ் கல்கத்தாவில் 1894-ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று பிறந்தார்.
போசான் (Boson) துகள்கள் மீதான அவருடைய அளப்பரிய ஆராய்ச்சி காரணமாக அவர் “கடவுள் துகளின் தந்தை“ (Father of God Particle) என அழைக்கப்படுகின்றார்.
சத்யேந்திரநாத் போஸ் – ஐன்ஸ்டின் கோட்பாட்டின் அணுவியல் துகள்கள் பற்றிய ஆய்வின் புள்ளியியல் விவரங்களோடு ஒத்திசைந்து அக்கோட்பாட்டைப் பின்பற்றி செயல்படும் துகள்களின் வகுப்பே, பேராசிரியர் போஸ் அவர்களின் பெயர் கொண்டு ‘‘போஸான்கள்“ (Bosons) என அழைக்கப்படுகின்றன.
ஐரோப்பிய எக்ஸ்ரே மற்றும் படிகவியல் ஆய்வகத்தில் பணிபுரியும் போது உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டின், லூயிஸ் டீ பிரேக்ளி மற்றும் மேரி க்யூரி போன்றோருடன் இணைந்து போஸ் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
1954-ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூஷன் விருதை இவர் பெற்றார்.
கல்வியாளர்களுக்கான நாட்டின் மிக உயரிய கவுரவமான தேசிய பேரராசிரியர் பணி இடத்திற்கு 1959-ஆம் ஆண்டு இவர் நியமிக்கப்பட்டார்.