TNPSC Thervupettagam

சத்ய பால் மாலிக் – ஒடிசா ஆளுநர் (கூடுதல் பொறுப்பு)

April 8 , 2018 2424 days 819 0
  • குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பீகார் ஆளுநரான சத்யபால் மாலிக்கிற்கு (72) கூடுதலாக ஒடிஸா மாநில ஆளுநர் பொறுப்பை அளித்துள்ளார்.  இவர் ஒடிஸாவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை  இந்த  கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார்.
  • இதற்கு முன் ஒடிஸாவின் ஆளுநராக SC ஜமீர் இருந்தார். அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஐந்து முறை நாகாலாந்து முதலமைச்சராக இருந்த SC ஜமீர் 2013 மார்ச் மாதம் ஒடிஸா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் இவர் கோவா மற்றும் மஹாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
  • இவருக்கு 2009 ஆம் ஆண்டு குஜராத் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்