சந்திரயான் - எஜெக்டா ஹாலோ
October 31 , 2023
392 days
283
- சந்திரயான்-3 தரையிறங்குக் கலமானது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
- இந்தக் கலம் தரையிறங்கும் போது சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பொருட்களின் கண்கவர் வகையிலான 'எஜெக்டா ஹாலோ' என்ற படலத்தினை உருவாக்கியது.
- தரையிறங்கும் நிகழ்வின் போது சுமார் 2.06 டன்கள் அளவிலான சந்திர தூசி மற்றும் மண் துகள்கள் (எபிரெகோலித்) வெளியேற்றப்பட்டன.
- கலம் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி 108.4 சதுர மீட்டர் பரப்பளவில் இந்தப் பொருட்கள் இடம் பெயர்ந்தன.
- எபிரெகோலித் என்பது சந்திரப் பாறைகள் மற்றும் மண், அல்லது ரெகோலித் அல்லது நிலவின் தூசிகள் ஆகும்.
Post Views:
283