TNPSC Thervupettagam

சந்திரயான் -2 அனுப்பிய படங்கள்

August 28 , 2019 1918 days 595 0
  • சந்திரனைச் சுற்றி வரும் சந்திரயான் - 2 விண்கலத்தின் நிலப்பரப்பு வரைபட புகைப்படக் கருவி - 2 எடுத்த நிலவின் மேற்பரப்புப் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

  • (அர்னால்ட்) சோமர்ஃபீல்ட் (ஜெர்மனி), (டேனியல்) கிர்க்வுட் (அமெரிக்கா), மித்ரா (இந்தியா), (சார்லஸ்) ஹெர்மைட் (பிரான்ஸ்) போன்ற பல்வேறு விஞ்ஞானிகளின் பெயரில் பெயரிடப்பட்ட பள்ளங்களை இந்தப் படங்கள் காட்டுகின்றன.
  • வங்காளத்தில் பிறந்த மித்ரா (1890-1963) ஒரு இயற்பியலாளர் மற்றும் பத்ம பூஷண் விருதினை வென்றவர் ஆவார்.
  • நிலவின் அம்சங்களைப் பெயரிடல் முறை இப்போது தரப்படுத்தப் பட்டுள்ளது.
  • 1973 இல் சர்வதேச வானியல் ஒன்றியத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி தற்போது பெயர்கள் இடப்படுகின்றன.
    • பள்ளம் மற்றும் பள்ளம் போன்ற அமைப்புகள்: வானியலாளர்கள் அல்லது புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் பெயரால், அவர்களது மரணத்திற்குப் பின் பெயரிடப் பட்டுள்ளன.
    • மலைகள்: பூமியில் உள்ள மலைகளின் புவியியல் பெயர்களுக்கு ஒத்ததாக பெயரிடப் பட்டுள்ளது
    • விரிவான இருண்ட மேற்பரப்புகள்: மனிதர்களின் மன நிலைகளுக்கு ஒத்த பெயர்கள் கொண்டு பெயரிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்