TNPSC Thervupettagam
March 26 , 2018 2435 days 1514 0
  • வல்லுநர்களின் ஆலோசனைப்படி, இந்தியாவின் 2-வது நிலவுக்குரிய திட்டமான சந்திராயன் – 2 அக்டோபர் (2018) மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் – 2 வைப் பற்றி

  • 800 கோடி ரூபாய் மதிப்பிலான சந்திரயான் – 2 திட்டமானது முழுவதுமாக உள்நாட்டுத் திட்டமாகும் (Totally indigenous mission).

  • ISRO-வானது சந்திராயன் – 2 உடன் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகியவற்றை முதன் முறையாக சோதனை செய்கிறது.
  • (ரோவர்- கோள்களின் பரப்பின் மீது நகரும் விண்வெளி ஆய்வு வாகனம்) (ஆர்பிட்டர் –இது புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் விண்வெளிவாகனம்) (லேண்டர் –நிலவு, கோள்கள் ஆகியவற்றில் தரையிரங்கும் விண்வெளி வாகனம்).
  • 170 கி.மீ ´ 12000 கி.மீ நீள்வட்டப் பாதையில் GSLV – F10 இணைக்கப்பட்டவுடன், உந்து சாதனத்தால் (Thruster – a propulsive device) ஆர்பிட்டர் 100 கி.மீ நிலவின் வட்டப் பாதையை நோக்கித் திட்டமிடப்பட்டபடி நகர்த்தப்படும். பின்னர், இந்த லேண்டர் ஆர்பிட்டரிலிருந்து ரோவரைப் பிரித்து நிலைநிறுத்தும்.
  • கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கத்திற்குப் பிறகு, லேண்டர் ஆனது நிலவின் தென்துருவத்தில் மெதுவாக இறங்குவதுடன் ரோவரை நிலை நிறுத்துகிறது.
  • நிலவுப் பரப்பில் மெதுவாகத் தரையிறங்குதல் (Soft – Landing) என்பது சந்திரயான் – 2 திட்டத்தின் சவால் நிறைந்த பகுதியாகும்.
  • தற்போதுவரை, அமெரிக்கா, இரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவுப் பகுதியில் விண்கலத்தை மெதுவாகத் தரையிறக்கியுள்ளன.
  • 14 புவி நாட்களின் போது, (14 Earth days) ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் 100 – 200 மீட்டர்கள் சுற்றளவில் நகரும் தன்மையைப் பெறும்.
  • ரோவரிலுள்ள அதிக ஆற்றலுடைய கேமரா உள்ளிட்ட கருவிகள் நிலவுப் பரப்பைக் கண்காணிப்பதுடன் நிலவின் புகைப்படத்தையும் எடுக்கின்றன.

      

  • புகைப்படம் எடுத்த 15 நிமிடங்களில், ஆர்பிட்டர் வழியாக ரோவர் பூமிக்கு இப்புகைப்படங்களை அனுப்புகிறது. இப்புகைப்படங்கள் நிலவின் மண்ணைப் பற்றி ஆராய உதவி புரியும்.
  • 3,290 கி.கி எடையுள்ள சந்திரயான் – 2 விண்கலம், நில இடவியல் தன்மைகள் (Lunar Topography), கனிமவியல், மிகுதியான எளிய மூலக்கூறுகள், நிலவின் புறவெளியடுக்கு மற்றும் ஹைட்ராக்சில் (OH தொகுதி) மற்றும் நீர் பனிக்கட்டி இருப்பதற்கான தடயங்கள் ஆகிய அறிவியல் பூர்வமான தகவல்களை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்