TNPSC Thervupettagam
August 30 , 2023 307 days 260 0
  • P. வீரமுத்துவேல் அவர்கள் சந்திரயான்-3 ஆய்வுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றினார்.
  • இவர் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • திருச்சியில் உள்ள முந்தைய பிராந்தியப் பொறியியல் கல்லூரியில் (தற்போது தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்) இயற்பியல் பொறியியலில் முதுகலைக் கல்வியை நிறைவு செய்தார்.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
  • அவருக்கு 2003 ஆம் ஆண்டில் HAL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப் பட்டது, ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.
  • 2014 ஆம் ஆண்டில் இஸ்ரோவில் இணைந்தார்.
  • புகழ்மிக்க சந்திரயான்-2 ஆய்வுத் திட்டத்திற்கான இணைத் திட்ட இயக்குநராக அவர் அறிவிக்கப்பட்டார்.
  • சந்திரயான்-3 ஆய்வுத் திட்டத்திற்கான ஒரு திட்ட இயக்குநராக நியமிக்கப் படுவதற்கு முன்பு, வீரமுத்துவேல் இஸ்ரோவின் துணை இயக்குநராகப் பணிபுரிந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்