- சந்திரயான் 3 விண்கலமானது, ஜூலை 14 ஆம் தேதியன்று மார்க் III ஏவுகலத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
- இது நிலவின் மேற்பரப்பினை எட்டுவதற்கு 41 நாட்கள் ஆனது.
- இந்த வெற்றிகரமான நிலவு ஆய்வுத் திட்டத்தின் மூலம், அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் ஒரு மிதமான வேகத்தில் விண்கலத்தினை தரையிறங்கச் செய்த ஒரு நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது.
- மேலும் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தினைத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
- 'பிரக்யான்' எனப்படும் உலாவி விண்கலமானது தென் துருவத்தில் நிலை நிறுத்தப் பட்டு உள்ளது.
- இந்த விண்கலத்தினை நிலவின் மண் கட்டமைப்பு மற்றும் அதன் பாறைக் கட்டமைப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக அடுத்த 14 நாட்களுக்கு இஸ்ரோ பயன்படுத்த உள்ளது.
- தென் துருவத்தில் பனிப் படிவுகள் மற்றும் கனிமங்கள் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த கடைசி 15 நிமிடச் செயல்பாடு
- தோராயமாக மாலை 5:45 மணிக்குத் தொடங்கி 15 நிமிடங்கள் வரை நீடித்த சந்திரயான் - 3 விண்கலத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த தரையிறங்கும் செயல்பாடான இது "முக்கியத்துவம் வாய்ந்த கடைசி 15 நிமிடச் செயல்பாடு" என்று அழைக்கப் படுகிறது.
- இந்தக் காலக் கட்டம் முழுவதும், அந்த விண்கலமானது சுயமாக இயங்கியதால், அதன் கட்டமைப்பு பொறியாளர்களையும் விஞ்ஞானிகளையும் வெறும் பார்வையாளர்களாக மாற்றியது.
- அதன் செயல்பாடுகள் குறித்த பல்வேறு அனைத்து விவரங்களும் விக்ரம் தரையிறங்கு விண்கலத்தின் உள்ளிணைக்கப்பட்ட கணினிகளில் பதிவாக்கப் பட்டிருந்தது.
- இந்த ஒரு முயற்சியானது, அதிவேக இயக்கம் கொண்ட ஒரு கிடைமட்ட நிலையிலிருந்து படிப்படியாக, நிலவின் மேற்பரப்பில் மிதமான முறையில் தரையிறங்கச் செய்வதை எளிதாக்க உதவும் ஒரு செங்குத்து இறங்குப் பாதையில் விண்கலத்தினை நுழையச் செய்யும் செயல்முறையை உள்ளடக்கியது.