இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான் 3 எனப்படும் நிலவு ஆராய்ச்சி விண்கலம் ஆனது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2023 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலமானது, மார்க் 3 ஏவூர்தி (LVM 3) மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ஆய்வுத் திட்டமானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 ஆய்வுத் திட்டத்தின் தொடர்ச்சியே ஆகும்.
சந்திரயான் 3 ஆய்வுத் திட்டமானது, நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாகத் தரை இறங்குதல் மற்றும் உலாவுதல் ஆகியவற்றில் ஆரம்பக் கட்டம் முதல் இறுதிக் கட்டம் வரையிலான செயல்பாட்டு வடிவிலானச் செயல்திறனை வழங்குவதற்குத் திட்டமிட்டு உள்ளது.
இத்திட்டத்தின் நோக்கங்கள் பின்வருமாறு
நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் சேதமற்ற வகையிலான தரை இறக்கத்தினைச் செயலாக்குதல்
நிலவில் உலாவிக் கலம் சுற்றி வந்து ஆய்வு செய்வதைச் செயலாக்குதல் மற்றும்
இடம் சார்ந்த அறிவியல் சோதனைகளை மேற்கொள்தல்.
நிலவின் மேற்பரப்பை அடைந்த பிறகு, ‘விக்ரம்’ எனப்படும் தரையிறங்குக் கலமானது, அது தாங்கி வந்த நான்கு அறிவியல்சார் விண்வெளி கலன்களை நிலைநிறுத்தும்.
அவை நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நிலவின் நிலப்பரப்பிற்குக் கீழே காணப்படும் பண்புகள் குறித்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தப்பெட்டகமானது, ‘பூமியினால் வெளியிடப்படும் மற்றும் பிரதிபலிக்கப்படும் ஒளி பற்றியத் தரவுகளைச் சேகரிக்கும் வகையில் வாழத்தகுந்தப் புவிக்கோளின் நிறமாலை-முனைவாக்கமானி’ (SHAPE) எனப்படும் கருவியைக் கொண்டுள்ளது.
‘பிரக்யான்’ எனப்படும் உலாவிக் கலமானது, நிலவின் மேற்பரப்பைச் சுற்றி வரும் சமயத்தில் ரசாயன மற்றும் காட்சிப்படச் சோதனைகளைப் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொள்ளும்.