சந்திராப்பூர் - வெப்பமான நகரம்
April 4 , 2022
840 days
432
- மகாராஷ்டிராவின் சந்திராப்பூர் நகரமானது உலகின் மூன்றாவது மிக வெப்பமான நகரமாக எல் டொராடோ வானிலை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த நகரத்தில் அதிகபட்சமாக 45.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
- மாலியின் கேயஸ் நகரம் பூமியின் வெப்பமான இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாலியைச் சேர்ந்த செகோவ் என்ற நகரம் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- பிராந்திய வானிலை மையத்தின் தகவல் படி, விதர்பா பகுதியின் மிகவும் வெப்பமான நகரமாக நாக்பூர் உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து அகோலா நகரம் உள்ளது.
Post Views:
432