சந்திர மண் மாதிரியிலிருந்து சிலிக்கான் கார்பைடைப் பிரித்தெடுத்தல்
February 23 , 2025
11 hrs 0 min
17
- சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனனது, சந்திர மண் மாதிரியில் இருந்து சிலிக்கான் கார்பைடைப் பிரித்தெடுப்பதில் வெற்றி அடைந்துள்ளது.
- இந்த வளர்ச்சியானது, நிலவில் வாழ்விடங்களை உருவாக்குவதற்கு என்று சிலிக்கான் கார்பைடு அடிப்படையிலான கலவைகளை உருவாக்க வழி வகுக்கும்.
- சிலிக்கான் கார்பைடு என்பது சிலிக்கான் மற்றும் கார்பனின் கலவையாகும்.
- 382 கிலோ எடை கொண்ட நிலவுப் பாறைகள் மற்றும் மண் மட்டுமே பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
- எனவே, நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக சந்திர மண் மாதிரிகளை உருவாக்குகின்றன.
- நிலவின் மலைப்பகுதிகள் அலுமினியம் மற்றும் கால்சியம் போன்ற பிற தனிமங்கள் உடன், சிலிக்கான் நிறைந்தவை ஆகும்.

Post Views:
17