சந்தை மூலதனத்தில் ரூ.3 டிரில்லியன் - விப்ரோ நிறுவனம்
June 7 , 2021
1269 days
594
- விப்ரோ நிறுவனமானது முதன்முறையாக சந்தை மூலதனத்தில் ரூ.3 டிரில்லியனை எட்டியுள்ளது.
- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களை அடுத்து இந்த நிலையை அடைந்த மூன்றாவது இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இதுவாகும்.
- ரூ. 3 டிரில்லியன் மதிப்பிலான சந்தை மூலதனத்தை எட்டிய 13 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
- தற்போது விப்ரோ நிறுவனமானது 14வது நிறுவனமாக இந்தப் பட்டியலில் இணைந்து உள்ளது.
- ரூ. 14.05 டிரில்லியன் மதிப்பிலான சந்தை மூலதனத்துடன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது இந்தியாவின் செல்வாக்குமிக்க நிறுவனமாக திகழ்கிறது.
- இதனையடுத்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (ரூ.11.58 டிரில்லியன்) மற்றும் HDFC வங்கி (ரூ.8.33 டிரில்லியன்) ஆகியவை உள்ளன.
Post Views:
594