TNPSC Thervupettagam

சந்தோஷ் கோப்பை

April 23 , 2019 2046 days 1337 0
  • லூதியானாவில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பை இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி சர்வீசஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.
  • சந்தோஷ் கோப்பை என்பது பிராந்திய மாநில மன்றங்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் பங்கு கொள்ளப்படும் கால்பந்து நாக் அவுட் போட்டியாகும்.
  • இது இந்தியக் கால்பந்தின் நிர்வாக அமைப்பான அனைத்து இந்தியக் கால்பந்து கூட்டமைப்பினால் (AIFF - All India Football Federation) நடத்தப்படுகின்றது.
  • சந்தோஷ் போட்டித் தொடரானது 1941 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இதற்கு சந்தோஷின் (தற்போது வங்க தேசத்தில் உள்ள ஒரு இடம்) மறைந்த மகாராஜா சர் மன்மத நாத் ராய் சவுத்ரி என்பவரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
  • அந்தக் காலக்கட்டத்தில் இவர் இந்தியக் கால்பந்து மன்றத்தின் அதிபர் மற்றும் போட்டியின் நன்கொடையாளராக விளங்கினார்.
  • இந்தப் போட்டித் தொடரில் முன்னணியில் உள்ள மூன்று போட்டியாளர்களுக்கு பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Position
Name of the Trophy
Donor
Winner Santhosh Trophy Maharaja of Santhosh
Runner-up Kamla Gupta Trophy Former head of Indian Football association head S.K.Gupta
Third Place The Sampangi Cup Karnataka State Football association
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்