TNPSC Thervupettagam

சனிக்கோளின் ஆற்றல் சமநிலையின்மை

June 24 , 2024 153 days 235 0
  • கிரகங்களின் பருவநிலை பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்கக் கூடிய வகையிலான பருவகால ஏற்றத்தாழ்வினை வெளிக்கொணர்வதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சனிக்கோளின் ஆற்றல் இயக்கவியலைக் கண்டறிந்துள்ளனர்.
  • ஒரு இராட்சத வாயு நட்சத்திரத்தில் பருவகால அளவீட்டில், உலகளாவிய ஆற்றல் ஏற்றத்தாழ்வு மதிப்பிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • சனிக் கோளானது மற்ற இராட்சத வாயுக் கோள்களைப் போலவே, சூரியக் கதிர்வீச்சு மற்றும் உள் வெப்பம் இரண்டிலிருந்தும் ஆற்றலைப் பெறுகிறது.
  • இருப்பினும், அதன் பெரிய சுற்றுப்பாதை மையப் பிறழ்வானது, அதன் சுற்றுப்பாதை முழுவதும் உட்கிரகிக்கப்பட்ட சூரிய சக்தியில் பல்வேறு வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
  • இந்த ஏற்றத்தாழ்வு ஆனது, அதன் வட்ட வடிவ சுற்றுப்பாதையின் காரணமாக குறைந்த பட்ச பருவகால ஆற்றல் மாறுபாடுகளை எதிர்கொள்ளும் பூமியை விடப் பெரிதும் வேறுபடுகிறது.
  • சனிக்கோளின் ஒழுங்கற்ற ஆற்றல் சமநிலையானது, அதன் தீவிரமான சுழல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்