நமது சூரிய மண்டலத்தில், சூரியனில் இருந்து ஆறாவது கோளாக அமைந்த சனி, அதன் கண்கவர் மற்றும் இயல்பு சார் சின்னமாக விளங்கும் அதன் வளையங்களுக்குப் பெயர் பெற்றது.
இந்த வளையங்கள், பெரும்பான்மையாக எண்ணற்றப் பனிக்கட்டித் துகள்கள் மற்றும் சிறிய பாறைத் துண்டுகளால் ஆனது.
2025 ஆம் ஆண்டில், ஒளியியல் மாயை காரணமாக இந்த வளையங்கள் பார்க்க முடியாதவாறு மறைந்து விடும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
சனிக் கோளானது பூமியுடன் சரியான சீரமைப்பில் இல்லை, அது 9 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்தக் கோணம் சுமார் 3.7 டிகிரியாகக் குறைந்திருக்கும்.
ஒரு வருடம் கழித்து, பூமியிலிருந்து அது விலகிச் செல்வதால், சனிக் கோளின் அச்சு அதன் தற்போதைய சாய்ந்த நிலையில் இருந்து செங்குத்து நிலைக்கு மாறும்.
இது அதன் வளையங்களை பூமிக்கு இணையான மெல்லிய கிடைமட்டப் பட்டை போல தோற்றமளிக்கும்.
இது இந்தக் கட்டமைப்பினைப் பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாக உள்ளது போல் தோன்றச் செய்யும்.
இந்த நிகழ்வு, வளையங்களின் அடிப்பகுதி வெளிப்படும் காலமான 2032 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.
சனிக் கோளின் வளைய அமைப்பு ஆனது அக்கோளில் இருந்து 282,000 கிலோ மீட்டர்கள் வரை நீண்டுள்ளது.
ஆனால் செங்குத்து உயரம் ஆனது பொதுவாக ஏழு பிரதான வளையங்களில் சுமார் 30 அடி இருக்கும்.