April 8 , 2025
12 days
96
- சிறந்த தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஜக்ஜீவன் இராம் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
- தற்காலிக அரசாங்கத்தின் போது, ஜக்ஜீவன் ராம் அதன் இளம் அமைச்சராகப் பதவி ஏற்றார்.
- சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் முதல் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக அவர் நியமிக்கப் பட்டார்.
- 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது அவர் பாதுகாப்பு அமைச்சராக செயலாற்றினார்.
- மொரார்ஜி தேசாய் ஆட்சியின் போது, ஜக்ஜீவன் ராம் துணைப் பிரதமராக நியமிக்கப் பட்டார்.
- 1936 முதல் 1986 ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகள் எவ்வித ஒரு இடைவெளியும் இல்லாமல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற உலகச் சாதனையை அவர் கொண்டுள்ளார்.
- இந்தியாவில் மிக நீண்ட காலம் (30 ஆண்டுகள்) அமைச்சரவை அமைச்சராகப் பணி ஆற்றியவரும் இவரே ஆவார்.

Post Views:
96