TNPSC Thervupettagam

சமத்துவமின்மையினைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டுக் குறியீடு – 2022

October 23 , 2022 635 days 354 0
  • இது 161 நாடுகள் தனது மக்கள் மத்தியில் சமத்துவமின்மையைக் குறைப்பதில் மேற் கொள்ளும் செயல்திறனை மதிப்பிடுகிறது.
  • இந்தக் குறியீடானது பொதுச் சேவைகள் (சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு), வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் ஆகிய துறைகளில் நாடுகளின் கொள்கைகள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
  • இது ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் மற்றும் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் இன்டர் நேஷனல் ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்தக் குறியீடு, பெருந்தொற்றுக் காலத்தின் போது சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடும் நாடுகளின் கொள்கைகள் மற்றும் செயல்களின் முதலாவது விரிவான மதிப்பீடாகும்.
  • குறைந்த வருமானம் மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தனது வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரச் செலவினங்களில் 50% வரை தனது பங்கைக் குறைத்துள்ளன.
  • 50% நாடுகள் சமூகப் பாதுகாப்புச் செலவினங்களின் பங்கைக் குறைத்துள்ளன என்பதோடு மேலும் 70% நாடுகள் கல்விச் செலவினத்தின் பங்கைக் குறைத்துள்ளன.
  • 143 நாடுகள் பணக்காரக் குடிமக்கள் மீதான வரி விகிதத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து விட்டன.
  • 11 நாடுகளின் அரசாங்கங்கள் உண்மையில் பணக்காரர்களுக்கான வரி விகிதங்களைக் குறைத்துள்ளன.
  • 2022 ஆம் ஆண்டின் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, ஜப்பான், டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தியா 123வது இடத்தில் உள்ளது என்றாலும் இது 2020 ஆம் ஆண்டு முதல் 6 இடங்கள் முன்னேறியுள்ளது (129 வது இடத்தில் இருந்தது).
  • இருப்பினும், சுகாதாரச் செலவினங்களைப் பொறுத்தவரை இந்தியா 2 இடங்கள் சரிந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்