டாக்டர்.B.R. அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளானது, ‘சமத்துவ நாளாக’ கொண்டாடப் படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் ஆனது ஏப்ரல் 14 அன்று கொண்டாடப் படுகிறது.
முதல்வர் அவர்கள் சட்டசபையில் 110வது விதியின் கீழ் இந்த ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.
110வது விதியின் கீழ், முதலமைச்சரோ அல்லது எந்தவொரு அமைச்சரோ, எந்த ஒரு விவாதமும் இன்றி நிறைவேற்றக் கூடிய வகையிலான எந்தவொரு தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் அறிவிக்கவோ அல்லது கொண்டு வரவோ முடியும்.