டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் (ஏப்ரல் 14) சமத்துவ நாளாகக் கொண்டாடப் படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
சட்டசபையில் விதி 110 என்பதின் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அன்றைய தினம் மாநிலம் முழுவதும் சமத்துவ தின உறுதிமொழி எடுக்கப்படும்.
சமூகச் சமத்துவத்தை நிலை நிறுத்துவதும், சாதியின் பெயரால் நடக்கும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும் வேண்டி அவர்களுடன் நின்று சமத்துவச் சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதும் இந்த உறுதிமொழியின் ஒரு முக்கிய அம்சமாகும்.