TNPSC Thervupettagam

சமமான பரிசுத் தொகை

September 23 , 2024 6 days 74 0
  • உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகையை வழங்க உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
  • இது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் T20 போட்டியிலிருந்து  தொடங்க உள்ளது.
  • மகளிர் T20 உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 2.34 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும்.
  • 2023 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் கோப்பை வென்ற போது ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் டாலரை விட இது 134% அதிகமாகும்.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆடவர் T20 உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2.45 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசைப் பெற்றது.
  • ICC 2024 ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கோப்பை ஆனது, மகளிர் அணியினர் ஆடவர் அணிக்கு இணையான பரிசுத் தொகையைப் பெற உள்ள முதல் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்