பயனுள்ள சமாதான் திட்டத்தினை மீண்டும் அறிமுகப் படுத்தச் செய்வதற்கான மசோதாவினை தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதற்கு முன் 2017-18 ஆம் ஆண்டு வரை கொண்டு வரப்பட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பாக அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி, அபராதம் மற்றும் வட்டி ஆகியவற்றின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு என்று மற்றொரு வாய்ப்பை வழங்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன் மதிப்பிடப்பட்ட நிலுவை மதிப்பீடுகள் இந்தத் திட்டத்தின் மூலம் வசூல் செய்யப்படும்.
சரக்கு மற்றும் சேவைகள் மீது வரி விதிக்கும் முறை, அதாவது ஜிஎஸ்டி வரியானது, 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிலுவைத் தொகையை விரைவாக வசூலிக்கும் நோக்கில், மாநில அரசு பல்வேறு சட்டங்களை இயற்றியதன் மூலம் 2006, 2008, 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சமாதான் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.