TNPSC Thervupettagam
November 1 , 2017 2717 days 1018 0
  • மத்திய சிறு,குறு,நடுத்தரத் தொழிற்துறை அமைச்சகமானது MSME சமாதான் எனும் தாமதிக்கப்பட்ட கட்டண செலுத்து இணையவாயிலை தொடங்கியுள்ளது.
  • மத்திய அரசாங்கம் மத்திய அமைச்சரவை துறைகள், மாநில அரசுகள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவற்றினுடனான தங்களின் தாமதிக்கப்பட்ட கட்டண செலுத்துதல் தொடர்புடைய விவகாரங்களை நேரடியாக பதிவு செய்ய நாடு முழுவதும் உள்ள சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு  அதிகாரமளிக்கும்  வகையில் இந்த இணைவாயில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த இணையவாயிலானது மத்திய அமைச்சரகங்கள், மாநில அரசுகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றுக்கு சிறு, குறு தொழிற்நிறுவனங்கள் அளிக்க வேண்டிய நிலுவை கட்டணங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கும்.
  • சிறு, குறு நடுத்தர தொழிற்துறை மேம்பாடு சட்டம்- 2006 ஆனது சிறு, குறு நிறுவனங்களுக்கான தாமதிக்கப்பட்ட கட்டணங்களோடு தொடர்புடைய கூறுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்