TNPSC Thervupettagam
September 8 , 2020 1450 days 625 0
  • லிகோ மற்றும் விர்கோ ஈர்ப்பு அலை ஆய்வகமானது 2019 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய 2 கருந்துளைகளின் இணைப்பை உறுதி செய்து உள்ளது.
  • இந்த சமிக்ஞையானது GW19052 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 2 கருந்துளைகள் (black holes) ஒன்றோடொன்று இணைந்ததைக் குறிக்கின்றது.
  • இந்த 2 கருந்துளைகளின் நிறையானது சூரியனின் நிறையை விட முறையே 66 மற்றும் 85 மடங்கு என்ற அளவு பெரியதாகும்.
  • இது சூரியனின் நிறையை விட 142 மடங்கு அதிகமான நிறையுடன் கருந்துளையாக இணைந்துள்ளது.
  • இந்தக் கருந்துளையானது 85 சூரிய ஒளி நிறையுடன் நடுத்தர நிறை வரம்பில் (முதன்முதலில் கண்டறியப்பட்ட) அமைந்துள்ளது.
  • இது கருந்துளைகள் எவ்வாறு உருவாகின என்பது குறித்து பழமையான அறிவை வரையறுக்கின்றது.
  • சூரிய ஒளி நிறை என்பது சூரியனின் நிறையாகும்.
  • இது 333000 பூமிகளுக்குச் சமமான 1.989 x 1030 கிலோ கிராம் நிறையைக் கொண்டு உள்ளது.
  • சூரியனின் நிறையில் 100-100,000 மடங்கு உள்ள கருந்துளைகள் நடுத்தர நிறை கொண்ட  கருந்துளைகள் எனப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்