உடல் உறுப்புகளைத் தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கணவன் அல்லது பெற்றோரிடமிருந்துப் பிரிந்த பெண்கள் குடும்பமாக அங்கீகரிக்கப் படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், அவர்கள் இனி ரேஷன் கார்டுகளைப் பெறலாம்.
இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவசப் பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.