திம்புவைச் சார்ந்த சார்க் (SAARC) மேம்பாட்டு நிதி, இந்தியா உட்பட 8 உறுப்பினர்களின் 80 நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்காக சமூக நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினைத் தொடங்க உள்ளது.
இந்த திட்டம் அனைத்து சார்க் உறுப்பினர் நாடுகளிலும் அமலாக்கப்பட்டுள்ளது. நன்கொடைகள் மற்றும் திரும்ப செலுத்தக் கூடிய முதலீடுகளினை பயன்படுத்தி சமூக நிறுவனங்களை அடையாளம் காண்பது மற்றும் கட்டமைப்பது இதன் நோக்கங்களாகும்.
சமூக மேம்பாட்டு நிதி, சார்க் (SARRC)-ன் அனைத்து 8 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களால் 2010-ல் பூடானின் திம்பு நகரத்தில் நடந்த 16-வது சார்க் உச்சி மாநாட்டில் நிறுவப்பட்டது.
ஆளும் பொது சபை இந்த எட்டு நாடுகளின் நிதி அமைச்சர்களை உள்ளடக்கியது. சமூக மேம்பாட்டு நிதியின் செயலகம் பூடானின் தலைநகரான திம்புவில் உள்ளது.
இது தெற்காசிய மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் வழித்தோன்றலாகும். தெற்காசிய மேம்பாட்டு வங்கி, 1996-ல் நடப்பில் இருந்த இரண்டு முறைகளை இணைத்து உருவாக்கப்பட்டது. அவையாவன,
சார்க்-ன் பிராந்தியத் திட்டங்களுக்கான நிதி (SFRP) மற்றும்
சார்க் பிராந்திய நிதி
சார்க்-ன் முன்னேற்ற வளர்ச்சித் திட்டங்களுக்கான குடை போன்ற அமைப்பாக சமூக மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.