தமிழகத்தில், சமூக சீர்திருத்தவாதி பெரியார் அவர்களின் பிறந்தநாளானது ஒவ்வோர் ஆண்டும் ‘சமூக நீதி நாளாக’ அனுசரிக்கப்படுகிறது.
திராவிடர் கழக நிறுவனர் ‘பெரியார்’ ஈ.வெ. இராமசாமி அவர்களின் 146வது பிறந்த நாளானது சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது.
சமூகச் சமத்துவமின்மையை நிலை நிறுத்தும் வகையில் அடக்குமுறை மிக்க பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் தகர்க்க முயன்ற திராவிட இயக்கத்திற்கு பெரியார் தலைமை தாங்கினார்.
இவர் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் என்ற சமூகப் பண்பாட்டு அமைப்பினையும் நிறுவியவர் ஆவார்.
குடியரசு என்ற வார இதழ் மூலம் பெரியார் அவர்கள் அரசியல் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்.