திராவிட இயக்கத்தைப் பற்றி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் K.திருநாவுக்கரசு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி K.சந்துரு ஆகியோருக்கு முறையே 2021 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
திரு. திருநாவுக்கரசு அவர்களின் படைப்பான நீதிக் கட்சி வரலாறு என்ற புத்தகமானது 1916 ஆம் ஆண்டில் நீதிக் கட்சி நிறுவப்பட்டது முதல் 1944 ஆம் ஆண்டில் திராவிடர் கழகம் என்று பெயரிடப்பட்டது வரையில் அதன் வரலாற்றை இரண்டு தொகுதிகளாக ஆவணப்படுத்துகிறது.
இவரது படைப்புகளான திராவிட இயக்க வேர்கள் மற்றும் திராவிட இயக்க தூண்கள் ஆகியவற்றிற்காகவும் இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
இவர் திராவிட இயக்கத்தின் நடமாடும் கலைக்களஞ்சியம் (mobile encyclopedia) என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
திரு. சந்துரு தனது பணிக் காலத்தின் போது 96,000 வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.
சமூக நீதிக்காக வேண்டி சிறந்தப் பங்களிப்பினை ஆற்றுபவர்களுக்கு தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் தந்தை பெரியார் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.
ஆதி திராவிடர் சமூகத்தின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றிய சிறந்த நபருக்கு அம்பேத்கர் விருதானது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டின் விருதுகளுக்கான ரொக்கத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.