TNPSC Thervupettagam

சமூக மோதல்கள் குறியீடு

December 8 , 2022 716 days 445 0
  • 2020 ஆம் ஆண்டில், அமெரிக்கச் சிந்தனைக் குழுவான பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட சமூக மோதல்கள் குறியீட்டில் (SHI) இந்தியா முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் சமூக விரோதக் குறியீடு, அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை விட மோசமாக இருந்தது.
  • இது 2019 ஆம் ஆண்டிற்கான அதன் குறியீட்டு மதிப்பில் இருந்து மேலும் முன்னேறி உள்ளது.
  • சமூகத்தில் உள்ள தனிநபர்கள், அமைப்புகள் அல்லது குழுக்களின் சமய விரோதச் செயல்களை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.
  • சமயம் தொடர்பான ஆயுத மோதல்கள் அல்லது பயங்கரவாதம் மற்றும் கும்பல் கொலை அல்லது மதவெறி வன்முறை உள்ளிட்ட 13 அளவீடுகளை இக்குறியீடு உள்ளடக்கியுள்ளது.
  • சமய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து அரசுக் கட்டுப்பாடுகள் குறியீடு (GRI) மதிப்பிடுகிறது.
  • சீனா 9.3 மதிப்பெண்களுடன் தரவரிசையில் மோசமான நிலையினைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவின் 34வது இடமானது, இத்தகைய "உயர்" நிலை அரசாங்கக் கட்டுப் பாடுகளைக் கொண்ட நாடுகள் என்ற பிரிவில் வகைப்படுத்தச் செய்வதற்கு ஒரு போதுமான அளவீடு ஆகும்.
  • சில குறிப்பிட்ட பிரிவுகளைத் தடை செய்வது, மதமாற்றத்தைத் தடை செய்வது, பிரசங்கிப்பதைக் கட்டுப்படுத்துவது அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மதக் குழுக்களுக்கு முன்னுரிமை சார்ந்த அங்கீகாரம் அளிப்பது போன்ற அரசாங்கங்களின் முன்னெடுப்புகள் உட்பட 20 நடவடிக்கைகளை அரசுக் கட்டுப்பாடுகள் குறியீடு உள்ளடக்கியுள்ளது.
  • இரண்டு குறியீடுகளிலும் 2020 ஆம் ஆண்டானது இந்தியாவின் மோசமான ஆண்டாக குறிப்பிடப் படவில்லை.
  • 2016 ஆம் ஆண்டானது சமூக மோதல்கள் என்ற பிரிவில் மோசமான ஆண்டாகவும், 2018 ஆம் ஆண்டானது அரசுக் கட்டுப்பாடுகள் என்ற பிரிவில் மோசமான ஆண்டாகவும் குறிப்பிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்