TNPSC Thervupettagam

சமூக வலைதளங்கள் மூலம் தகவல் திரட்ட வரித்துறை திட்டம் – “புராஜெக்ட் இன்சைட்”

September 13 , 2017 2667 days 920 0
  • கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவும் வரி ஏய்ப்பை தடுப்பதற்காகவும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை திரட்ட வரு மான வரித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக `புராஜெக்ட் இன் சைட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • `புராஜெக்ட் இன்சைட்’ எனும் திட்டம் மிகப் பெரிய தகவல்களை ஆராயும் திட்டமாகும். ஒருவருடைய வருமானத்தையும் சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ள விவரங்களையும் சரிபார்க்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருவர் குறிப்பிட்டுள்ள வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்தததை சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தால் எளிதாக கண்டறிய முடியும்.
  • மத்திய அரசு ஏற்கெனவே பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் அனைவருடைய வருமானம் மற்றும் சொத்து விவரங்களை எளிதாக கண்காணிக்க முடியும்.தற்போது `புராஜெக்ட் இன் சைட்’ மூலம் தனது கண்காணிப்பு நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளது.
  • `புராஜெக்ட் இன்சைட்’ திட்டத்துக்காக கடந்த ஆண்டு எல் அண்ட் டி (L&T) இன்போடெக் நிறுவனத்துடன் வருமான வரித்துறை ஒப்பந்தம் செய்து கொண்டது. எல் அண்ட் டி நிறுவனம் இதற்கான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்