இந்தியாவில் சமையல் எண்ணெய் நுகர்வு முறைகளை மதிப்பிடுவதற்கான முதல் கணக்கெடுப்பினை மத்திய வேளாண் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
சமையல் எண்ணெய்கள்-எண்ணெய் வித்துக்கள் (NMEO-எண்ணெய் வித்துக்கள்) தொடர்பான புதியத் திட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவானத்து உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர் நாடாக இருந்தாலும், நுகர்வு முறைகள் குறித்த சமீபத்திய தரவுகள் எதுவும் இல்லை.
இந்தியாவில் தனிநபர் வருடாந்திர சமையல் எண்ணெய் நுகர்வு ஆனது 20 கிலோ கிராமிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) பரிந்துரைத்த 12 கிலோகிராம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயிக்கப்பட்ட 13 கிலோகிராம் என்ற வரம்புகளை மீறும் வகையில் உள்ளது.