TNPSC Thervupettagam

சம்பந்த் ஃபின்செர்வ்வின் உரிமம்

April 28 , 2021 1307 days 678 0
  • மோசடியின் காரணமாக பாதிக்கப்பட்ட சம்பந்த் ஃபின்செர்வ் பிரைவேட் லிமிடெட்டின் உரிமத்தினை ரத்து செய்யும் முன்னர் இந்திய ரிசர்வ் வங்கியானது காரணம் கேட்புக் குறிப்பாணையினை (Show Cause Notice) அளித்துள்ளது.
  • சமீபத்திய மாதங்களில் அந்நிறுவனத்தின் நிகர மதிப்பு குறைந்தபட்ச ஒழுங்குமுறைக்கு கீழே சென்றதாலும் அதன் நிதிநிலை மீட்சிநிலையை விட மோசமடைந்ததாலும் இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.
  • சம்பந்த் நிறுவனம் ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் சிறு நிதி நிறுவனமாக (NBFC – MFI) பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளின்படி, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் அவற்றின் ஒட்டு மொத்த ஆபத்து நிறைந்த சொத்துக்களில் 15% என்ற அளவிற்கு குறையாது நிலை – I மற்றும் நிலை – II என்ற மூலதனங்களைக் கொண்ட குறைந்தபட்ச மூலதன நிலையைக் கடைபிடிக்க வேண்டும்.
  • சம்பந்த் ஃபின்செர்வ் பிரைவேட் லிமிடெட் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இதன் தலைமையகம் ஒடிசாவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்