TNPSC Thervupettagam

சம்பூர்ணானந்த் தொலைநோக்கி

November 1 , 2022 758 days 589 0
  • சம்பூர்ணானந்த் தொலைநோக்கியின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது
  • இது 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு இயக்கப்பட்டது.
  • இந்த 104 செமீ அல்லது ஒரு மீட்டர்-ரக ஒளியியல் தொலைநோக்கியானது உத்தர காண்ட் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவில் செயல்பட்டு வரும் மிகப் பழமையான தொலைநோக்கி இதுவாகும்.
  • சனிக் கோளினைச் சுற்றி இரண்டு வளையங்கள் இருப்பதைக் கண்டுபிடிப்பதில் இது முக்கியப் பங்கினை ஆற்றிய நிலையில், அவற்றில் ஒன்று புதிதாக அடையாளம் காணப் பட்டது.
  • யுரேனஸைச் சுற்றியுள்ள வளையங்களைக் கண்டறிவதில் இது உதவியதோடு மட்டுமல்லாமல் இதன் மூலம் நெப்டியூனின் வளையமும் இந்த வசதியைப் பயன்படுத்தி சுயாதீனமாக கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது நைனிடாலின் தென்மேற்கில் அமைந்த மனோரா மலைச்சிகரத்தில் (சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 1,951 மீட்டர்) அமைந்துள்ளது.
  • அதே சமயம் கர்நாடகாவின் காவலூர், ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகம் மற்றும் நைனிடால் ஆகிய இடங்களில் ஒரே மாதிரியான மூன்று தொலை நோக்கிகள் நிறுவப்பட்டன.
  • ஆனால் சம்பூர்ணானந்த் தொலைநோக்கி மட்டுமே இன்றும் தொடர்ந்து இயங்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்