கர்நாடக சமூக நலத்துறையானது தனது மாநிலத்தில் சம்ருத்தி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது சிறிய நகரங்களில் உள்ள பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான அடிமட்ட நிலையிலுள்ள இளைஞர்களுக்கான 800 கோடி ரூபாய் அளவிலான தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டமாகும்.
தனியார் நிறுவனங்கள் மூலம் சில்லறை வர்த்தக மேலாண்மை மற்றும் கிளைகள் நிறுவுவதற்கான வாய்ப்புகளுக்காக எஸ்.சி (SC – Scheduled Caste – பட்டியலிடப்பட்ட வகுப்பினர்) மற்றும் எஸ்.டி. (ST – Scheduled Tribe – பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) சமூகத்தில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சியளித்திட இது திட்டமிடுகிறது.
இதன் பின்னர் பயிற்சி பெற்றவர்களில் தகுதியுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சான்றிதழ் அளித்து அவர்கள் தங்கள் கிளைகளை அமைக்க ஆரம்ப உதவியாக 10 லட்சம் வரை மானியம் அளித்து அரசு உதவிடும்.
இந்த திட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டில் 10000 தொழில் முனைவோர்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.