சம்வேத்னா எனப் பெயரிடப்பட்ட பலதரப்பு விமானப்படைப் பயிற்சியை இந்தியா நடத்தியுள்ளது.
இந்திய விமானப்படையும், தெற்கு விமானப்பிரிவும் (South Airforce Command) இந்த விமானப்படைப் பயிற்சிக்குத் தலைமை தாங்கியுள்ளன.
சம்வேத்னா என்றால் இரக்கம் (Empathy) எனப்பொருள். இதுவே தெற்காசிய பிராந்தியத்தின் முதல் உயர் இருப்பு பேரிடர் மீட்பு (HADR- High Availability Disaster Recovery) விமானப்படைப் பயிற்சி ஆகும்.
இந்தப் பயிற்சியில் இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் விமானப்படைகளும் பங்கேற்றன.
சர்வதேச நாடுகளின் கூட்டுறவோடு கூடிய பேரிடர் மேலாண்மையில் விமானப்படையைத் தலைமையாகக் கொண்டு HADR தீர்வுகளை செயல்படுத்துதலில் இப்பயிற்சி கவனம் செலுத்துகிறது.
இந்தப் பயிற்சியானது நட்பு நாடுகளுக்கிடையே சிறந்த புரிதல் மற்றும் மேலாண்மை செயல்முறையை பகிர்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது.