TNPSC Thervupettagam
March 12 , 2018 2452 days 733 0
  • சம்வேத்னா எனப் பெயரிடப்பட்ட பலதரப்பு விமானப்படைப் பயிற்சியை இந்தியா நடத்தியுள்ளது.
  • இந்திய விமானப்படையும், தெற்கு விமானப்பிரிவும் (South Airforce Command) இந்த விமானப்படைப் பயிற்சிக்குத் தலைமை தாங்கியுள்ளன.
  • சம்வேத்னா என்றால் இரக்கம் (Empathy) எனப்பொருள். இதுவே தெற்காசிய பிராந்தியத்தின் முதல் உயர் இருப்பு பேரிடர் மீட்பு (HADR- High Availability Disaster Recovery) விமானப்படைப் பயிற்சி ஆகும்.
  • இந்தப் பயிற்சியில் இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் விமானப்படைகளும் பங்கேற்றன.
  • சர்வதேச நாடுகளின் கூட்டுறவோடு கூடிய பேரிடர் மேலாண்மையில் விமானப்படையைத் தலைமையாகக் கொண்டு HADR தீர்வுகளை செயல்படுத்துதலில் இப்பயிற்சி கவனம் செலுத்துகிறது.
  • இந்தப் பயிற்சியானது நட்பு நாடுகளுக்கிடையே சிறந்த புரிதல் மற்றும் மேலாண்மை செயல்முறையை பகிர்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்