TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவைகள் வரி ஆணையத்தின் 39வது கூட்டம்

March 18 , 2020 1586 days 578 0
  • சரக்கு மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax GST) ஆணையத்தின் 39வது கூட்டமானது சமீபத்தில் டெல்லியில் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்குப் பொருந்தக் கூடிய சரக்கு மற்றும் சேவைகள் வரி விகிதங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

முக்கிய முடிவுகள்

  • கைபேசிகள் மற்றும் அவற்றின் சில உதிரிப் பாகங்கள் மீதான GST வரி விகிதமானது 12%லிருந்து 18% ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
  • விமானத்தின் எம்ஆர்ஓ (பராமரிப்பு பழுதுபார்ப்பு மாற்றியமைத்தல்) சேவைகள் மீதான GST வரி விகிதமானது 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.
  • கையால் தயாரிக்கப்பட்ட மற்றும் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகள் மீதான GST வரி விகிதமானது 12% ஆகத் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

GST ஆணையம்

  • GST என்பது 101வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு அரசியலமைப்பு ரீதியிலான அமைப்பு ஆகும்.
  • இது அரசியலமைப்பின் 279 ஏ என்ற சரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது மத்திய நிதியமைச்சர் அவர்களால் தலைமை தாங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்