TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை இழப்பீட்டு வீதவரி

October 5 , 2024 49 days 129 0
  • சரக்கு மற்றும் சேவை வரி (GST) சபையானது, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இழப்பீட்டு வீதவரி (தீர்வை வரி) முடிவடைந்தவுடன், வெகு ஆடம்பர, பாதகம் விளைவிக்கும் பொருட்கள் மற்றும் விற்பனை குறைக்கப்பட வேண்டிய பொருட்கள் மீதான வரி விதிப்பு குறித்து முடிவு செய்ய இந்தக் குழுவிற்கு பணிக்கப் பட்டுள்ளது.
  • GST வரி வரம்பில், 28% வரிக்கு மேல் ஆடம்பர, பாதகம் விளைவிக்கும் பொருட்கள் மற்றும் குறைபாடுள்ளப் பொருட்களுக்கு பல்வேறு விகிதங்களில் இழப்பீட்டு  வீதவரி விதிக்கப்படுகிறது.
  • வீதவரி மூலம் கிடைக்கும் வருமானம் ஆனது முதலில் GST நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அல்லது 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஐந்து ஆண்டுகளுக்கு திட்டமிடப் பட்டது.
  • GST அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய இந்த வீதவரி பயன்படுத்தப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், இந்த தீர்வை வரியை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க சபை முடிவு செய்தது.
  • தற்போது, ​​ GST என்பது 5, 12, 18 மற்றும் 28% ஆகிய சில அடுக்குகளைக் கொண்ட நான்கு அடுக்கு வரி அமைப்பாகும்.
  • GST சட்டத்தின்படி, சரக்கு மற்றும் சேவைகளுக்கு 40% வரை வரி விதிக்கப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்