TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் 49வது கூட்டம்

February 21 , 2023 642 days 338 0
  • சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் 49வது கூட்டமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
  • இந்தச் சபையானது, பொதிகளாக முத்திரையிட்டு விற்கப்படும் வெல்லப்பாகு மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை 18 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைத்துள்ள நிலையில் அவை முத்திரையின்றி விற்கப்பட்டால் அவற்றிற்கு வரி விதிக்கப்படாது.
  • முன்னதாக வரைகோல் (பென்சில்) கூர்மையாக்கிகளின் விலை மீதான வரியானது 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • வரிக் கண்காணிப்பு அமைப்புகள் மீதான வரி விகிதங்கள் 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது, எனினும் அது நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.
  • நீதிமன்றங்களால் வழங்கப்படும் சேவைகள் ஆனது மறுதலை வரி விதிப்பு முறை மூலமாக வசூலிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்