சரக்கு மற்றும் சேவை வரி தினமானது, நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியானது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
நாடாளுமன்றம் ஆனது 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரசியலமைப்பு (101வது திருத்தம்) சட்டத்தினை நிறைவேற்றியது.
இது சரக்கு மற்றும் சேவை வரியினை விதிப்பதற்கும் அதனை வசூலிப்பதற்கும் மத்திய அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.
2017 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப் பட்டது.
இது மாநிலங்களுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்திற்கான ஒரு ஒருங்கிணைந்தச் சந்தையை உருவாக்குகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் கலால் வரி, சேவை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி (VAT) போன்ற பல மறைமுக வரிகளுக்குப் பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி நிர்ணயிக்கப்பட்டது.
இது வரி விதிப்பு முறையை எளிமையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மாற்றி உள்ளது.