முதன் முதலில் 2018 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது என்ற வகையில் இந்தத் தினம் சரக்கு மற்றும் சேவை வரி முறை ஏற்றுக் கொள்ளப் பட்ட முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
பாராளுமன்றம் ஆனது சரக்கு மற்றும் சேவை வரியினை விதித்து வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அரசியலமைப்பு (101வது திருத்தம்) சட்டத்தினை இயற்றியது.
சரக்கு மற்றும் சேவை வரி என்பது, மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல சிக்கலான வரிகளை நீக்கியதன் மூலம் இந்தியாவின் வரி கட்டமைப்பினை மாற்றியமைத்த ஒரு விரிவான மறைமுக வரியாகும்.
சரக்கு மற்றும் சேவை வரியானது, விதிப்பு இலக்குகளை மையமாகக் கொண்டு, வெளிப்படைத் தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தச் செய்வதன் மூலம் வரி கட்டமைப்பை எளிதாக்கியது.