TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் முதலிடங்கள்

December 25 , 2017 2556 days 914 0
  • சரக்கு மற்றும் சேவை வரிக்கு மாறிய காலத்தின் முதல் ஐந்து மாதங்களில் மகாராஷ்டிராவும் உத்தரப்பிரதேசமும் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மத்தியில் முதல் இரு பங்களிப்பாளர்களாக உள்ளன.
  • மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் 18,701 கோடிகளோடு மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 8739 கோடிகளோடு இரண்டாமிடத்திலும் அதனைத் தொடர்ந்து கர்நாடகாவும் குஜராத்தும் உள்ளன.
  • ஆடம்பர பொருட்களின் மீதான வரிவிதிப்பில் மகாராஷ்டிரா 3702 கோடியும், உத்தரப்பிரதேசம் 3549 கோடியும் வசூலித்தன.
  • சரக்கு மற்றும் சேவை வரி முறை நான்கு முக்கிய வரித்திட்டங்களான 0, 5, 12, 18 மற்றும் 28 சதவிதங்களோடு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டன.
  • புகையிலை, சிகரெட்டுகள் மற்றும் ஆடம்பர கார்கள் மீது விதிக்கப்படும் உயர்ந்த வரிவிதிப்பான 28 சதவிகிதத்தோடு சேர்த்து 1 முதல் 290 சதவிகிதம் வரை செஸ் எனப்படும் வரி விதிக்கப்பட்டது.
  • இந்த செஸ் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை ஆனது ஜி.எஸ்.டி அமல்படுத்துவதன் மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட பயன்படுத்தப்படும் நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்