TNPSC Thervupettagam

சரக்கு ரயில் - மணிப்பூர்

February 2 , 2022 901 days 503 0
  • முதல் சரக்கு இரயிலானது மணிப்பூரின் ராணி கைடின்லியு இரயில் நிலையத்தை அடைந்தது.
  • 75 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூருக்குள் நுழையும் முதல் சரக்கு ரயில் இதுவாகும்.
  • மணிப்பூர் மலைகள் நிறைந்த ஒரு மாநிலம் ஆகும்.
  • இதனால், இப்பகுதியில் இரயில் பாதை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
  • இந்த மாநிலத்தில் கட்டமைக்கப்பட்ட புதிய இரயில் பாதையின் நீளம் 111 கி.மீ. ஆகும்.
  • இது ஜிரிபாம் நகர் முதல் இம்பால் வரை நீள்கிறது.
  • ஜிரிபாம் இரயில் நிலையம் ஆனது, அசாம் - மணிப்பூர் எல்லையில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது.
  • இந்தப் புதிய இரயில் பாதையில் 46 சுரங்கப் பாதைகளை இரயில்வே துறை அமைக்க உள்ளது.
  • மேலும், இதில் 153 பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
  • உலகின் மிக உயரமான பாலம் இந்த வழித் தடத்திலேயே அமைந்துள்ளது.
  • இது நோனி மாவட்டத்தில் உள்ளது.
  • இந்தப் பாலமானது 141 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்