TNPSC Thervupettagam
May 2 , 2018 2301 days 3035 0
  • குஜராத்தி கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் கல்வியியலாளரான சிதன்சூ யஸஸ்சந்திரா (Sitanshu Yashaschandra) 2017-ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “வகார்“ (Vakhar) எனும் கவிதைகளின் தொகுப்பிற்காக சிதன்சூ யஸஸ்சந்திராவிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • தற்போது வழங்கப்பட்டிருக்கும் இவ்விருதானது சரஸ்வதி சம்மான் விருதின் 27வது பதிப்பாகும்.
  • இவர் பத்ம பூஷண் விருதிணையும், சாஹித்ய அகாடமி விருதினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இவர் ஒடிஸ்ஸேவ்ஸ்னு ஹலேசு (Odysseusnu Halesu), ஜடாயூ (Jatayu), வாகர் (Vakhar) என 3 கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார்.

சரஸ்வதி சம்மான் விருதினைப் பற்றி

  • சரஸ்வதி சம்மான் விருது ஆண்டுதோறும் கடைசி பத்தாண்டுகளில் வெளியிடப்பட்ட சிறந்த கவிதைகள் அல்லது கவிதை இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது .
  • இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எட்டில் (Schedule VIII) குறிப்பிடப்பட்டிருக்கும் இருபத்து இரண்டு மொழிகளில் எழுதப்படும் கவிதை இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
  • கல்வியின் கடவுளான சரஸ்வதியின் பெயரால் வழங்கப்படும் இவ்விருது இலக்கிய உலகில் மிக உயரியதாக கருதப்படுகிறது.
  • சரஸ்வதி சம்மன் விருது கே.கே.பிர்லா அமைப்பால் 1991 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
  • K. பிர்லா அறக்கட்டளையானது ஹிந்தி எழுத்தாளர்களுக்கு வியாஸ் சம்மான் விருதினையும் (Vyas Samman), ராஜஸ்தானி எழுத்தாளர்கள் மற்றும் ஹிந்தி எழுத்தாளர்களுக்கு பிஹாரி புரஸ்கார் விருதினையும் (Bihari Puraskar) வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்