கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை சுகாதார மையங்கள் பதிவேட்டில் (HFR) சரிபார்க்கப்பட்ட சுகாதார மையங்களின் ஒரு முழுமையான எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்களாகும்.
தேசிய சுகாதார வளக் களஞ்சிய (NHRR) தரவு ஆனது 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களின் தகவல்களை சேகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
HFR என்பது பொது மற்றும் தனியார் சுகாதார மையங்களுக்கான தேசிய எண்ணிம சுகாதாரப் பதிவேட்டை உருவாக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட, சுகாதார மையங்களின் களஞ்சியமாகும்.
அதிநவீன மற்றும் வெகுவான பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படையிலான மருத்துவமனைகள், சிறிய மருத்துவமனைகள், நோயறிதல் ஆய்வகங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
நாட்டிலேயே சுமார் 60,711 சரிபார்க்கப்பட்ட மையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் கர்நாடகா ஆகும்.
அதைத் தொடர்ந்து முறையே 81.2 சதவீதம் மற்றும் 69.1 சதவீதம் மைய நிறுவல் விகிதங்களைக் கொண்டுள்ள திரிபுரா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
குறைந்த அளவிலான ஒரு மைய நிறுவல் விகிதத்துடன் இந்தப் பட்டியலின் கடைசி இடங்களில் ஒடிசா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகியவை இடம் பெற்றுள்ளன.